தி ஹண்ட்ரட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்ய இந்திய உரிமையாளர்களுக்கு ஈசிபி அறிவுறுத்தல்
February 23, 2026

இங்கிலாந்தின் ‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களை சேர்ப்பது குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, எட்டு அணிகளின் உரிமையாளர்களுக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) கடிதம் எழுதியுள்ளது. இந்தாண்டு ஏலத்தில் 67 பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய உரிமையாளர்கள் அவர்களை புறக்கணிக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியான நிலையில், ஈசிபி இந்த தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளது.
அனைத்து நாட்டு வீரர்களுக்கும் இந்தத் தொடரில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஈசிபி தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். இருப்பினும், வீரர்களை ஏலத்தில் எடுப்பது குறித்த இறுதி முடிவை அந்தந்த அணி நிர்வாகங்களே எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.