வைகை ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ் நூலிழையில் உயிர் தப்பிய நோயாளிகள்

வைகை ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ் நூலிழையில் உயிர் தப்பிய நோயாளிகள்

தேனியிலிருந்து மதுரை நோக்கி நோயாளி ஒருவருடன் சென்ற தனியார் ஆம்புலன்ஸ், கானாவிலக்கு அருகே வைகை ஆற்றுப் பாலத்தில் விபத்துக்குள்ளானது. முன்னால் சென்ற கார் திடீரென திரும்பியதால் நிலைதடுமாறிய ஆம்புலன்ஸ், பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பெண் நோயாளி மற்றும் அவரது உறவினர்கள் இருவர் என மொத்தம் நான்கு பேர் காயமடைந்தனர்.

பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி நின்றதால் ஆம்புலன்ஸ் ஆற்றுக்குள் விழாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கானாவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *