ரூபாய் 5000 உரிமைத் தொகை மற்றும் மெகா தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை அதிரடி ஒப்புதல்

ரூபாய் 5000 உரிமைத் தொகை மற்றும் மெகா தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை அதிரடி ஒப்புதல்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மகளிர் மற்றும் தொழில் துறை சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இடைக்கால பட்ஜெட் அறிவிப்பின்படி, மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் பயனாளர்களுக்கு கோடை கால சிறப்புத் தொகையுடன் சேர்த்து மொத்தம் 5,000 ரூபாய் வழங்க அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த 31,502 கோடி ரூபாய் மதிப்பிலான 46 புதிய தொழில் திட்டங்களுக்கு சிறப்புச் சலுகைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மெகா முதலீடுகள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கம் மூலம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *