நெல்லை தச்சநல்லூரில் துணிகர சங்கிலி பறிப்பு முயற்சி விபத்தில் முடிந்த பரபரப்பு
February 23, 2026

திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனர். அந்தப் பெண் சாமர்த்தியமாகச் சத்தமிடவே, பொதுமக்கள் திரண்டு வருவதைக் கண்டு தப்பிக்க முயன்ற கொள்ளையர்களின் வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய மற்றொரு நபரைத் தேடி வரும் போலீசார், பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.