புத்திசாலித்தனத்தை அதிகரிக்க எந்தப் பால் சிறந்தது ராஜஸ்தான் அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

புத்திசாலித்தனத்தை அதிகரிக்க எந்தப் பால் சிறந்தது ராஜஸ்தான் அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

நாட்டுப் பசுவின் பால் குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் அதே வேளையில் எருமைப்பால் அவர்களைச் சோம்பேறியாக்கும் என்று ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் பேசியுள்ளார். பசுவின் கன்று சுறுசுறுப்பாக இருப்பதை உதாரணமாகக் காட்டி அவர் தனது கருத்தை ஒரு நிகழ்ச்சியில் முன்வைத்துள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் மருத்துவ நிபுணர்கள் இதனை மறுத்துள்ளனர். எருமைப்பாலை விட பசுவின் பால் அறிவாற்றலை அதிகரிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் பாலில் உள்ள கொழுப்புச் சத்து புத்திசாலித்தனத்தை தீர்மானிக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *