பிரம்மோஸை விட வேகமான கோல்டன் ஹொரைசன் ஏவுகணையை இந்தியாவுக்கு வழங்க இஸ்ரேல் விருப்பம்
February 23, 2026

இந்தியாவிற்கு தனது அதிநவீன ‘கோல்டன் ஹொரைசன்’ ஏவுகணையை வழங்க இஸ்ரேல் ஆர்வம் காட்டி வருகிறது. நிலத்தடியில் உள்ள பதுங்கு குழிகள் மற்றும் அணுசக்தி மையங்களை ஊடுருவி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை இது துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டது.
இந்திய விமானப்படையின் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களில் இந்த ஏவுகணையை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இஸ்ரேலிடமிருந்து லாரா மற்றும் ராம்பேஜ் ஏவுகணைகளை இந்தியா பெற்றுள்ள நிலையில், கோல்டன் ஹொரைசன் நாட்டின் பாதுகாப்புப் படையை மேலும் வலுப்படுத்தும். எனினும், இந்த ஏவுகணையை வாங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.