20 முறை தப்பிய ஜெய்ஷ் தளபதி சைபுல்லா என்கவுண்டரில் சுட்டுக்கொலை
February 23, 2026

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில், தேடப்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது தளபதி சைபுல்லா உட்பட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக காஷ்மீரில் தலைமறைவாக இருந்த சைபுல்லா, சுமார் 20 முறை ராணுவத்தின் பிடியிலிருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சத்ரூ வனப்பகுதியில் ராணுவம் மற்றும் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த வெற்றி கிடைத்துள்ளது. கொல்லப்பட்டவர்களிடமிருந்து ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஜூலையில் நான்கு வீரர்கள் வீரமரணமடைந்த தாக்குதலில் சைபுல்லாவிற்கு முக்கிய பங்குண்டு.