நீதிமன்ற தீர்ப்பு எனக்கு சாதகமானது என்று டிரம்ப் அதிரடி பேச்சு
February 23, 2026

இறக்குமதி வரி தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டு உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த தீர்ப்பு முட்டாள்தனமானது என்றும், இது சர்வதேச அளவில் பிரிவினையை ஏற்படுத்தும் என்றும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும் இந்த உத்தரவு தனது அதிகாரத்தை குறைக்கவில்லை மாறாக அதிகரித்துள்ளதாக டிரம்ப் வாதிடுகிறார். அமெரிக்காவை சுரண்டும் நாடுகளுக்கு எதிராக உரிமங்கள் மூலம் இனி கூடுதல் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இந்த தீர்ப்பு தனக்கு வழிவகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.