டெல்லி என்சிஆர் பகுதியில் நிலக்கரி தொழில்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறதா உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

டெல்லி என்சிஆர் பகுதியில் நிலக்கரி தொழில்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறதா உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் குறைக்க உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. டெல்லியிலிருந்து 300 கி.மீ தொலைவிற்குள் புதிய அனல் மின் நிலையங்களை அமைக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி அமைச்சகங்கள் விரிவான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் நிலக்கரி சார்ந்த தொழில்களை இடமாற்றம் செய்வது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. வாகனப் புகையினால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்துவது குறித்த அடுத்தகட்ட விசாரணை மார்ச் 12-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நிலக்கரி தொழில்களைப் படிப்படியாக வெளியேற்றவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *