நள்ளிரவில் பிரியாணி சாப்பிடும் பழக்கம் உயிருக்கே ஆபத்தாக முடியுமா

நள்ளிரவில் பிரியாணி சாப்பிடும் பழக்கம் உயிருக்கே ஆபத்தாக முடியுமா

நகர்ப்புறங்களில் நள்ளிரவில் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது இது நமது உடலின் இயற்கையான உயிரியல் கடிகாரத்தை (Circadian Rhythm) முற்றிலுமாக சிதைக்கிறது. இரவில் செரிமான மண்டலம் ஓய்வெடுக்கும் நிலையில் அதிக கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்வது கொழுப்பாக படிந்து உடல் பருமன் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளை உருவாக்குகிறது. இத்தகைய பழக்கம் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கான வாய்ப்பை பலமடங்கு உயர்த்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இரவு நேரப் பணியாளர்கள் பிரியாணிக்கு மாற்றாக பழங்கள் அல்லது முட்டை போன்ற எளிதில் செரிமானமாகும் உணவுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. பணிக்குச் செல்லும் முன்பே இரவு உணவை முடித்துவிட்டு வேலை முடிந்து வீடு திரும்பியதும் லேசான சிற்றுண்டியுடன் உறங்கச் செல்வது ஆரோக்கியமானது. உடலின் சுய சுத்திகரிப்பு நடைமுறையான ‘ஆட்டோஃபேகி’ தடையின்றி நடக்க இரவு நேர உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவது அவசியம். முறையற்ற உணவுப் பழக்கம் எதிர்காலத்தில் கடுமையான மருத்துவச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *