குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லூட்யன் சிலைக்குப் பதிலாக ராஜாஜி சிலை திறப்பு
February 23, 2026

சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரியின் மார்பளவு சிலையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைத்தார். பிரிட்டிஷ் கால அடையாளங்களை அகற்றி இந்தியத் தலைவர்களைக் கௌரவிக்கும் முயற்சியாக, எட்வின் லூட்யன் சிலை இருந்த இடத்தில் இச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ராஜாஜியின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளைப் போற்றும் வகையில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை சிறப்புப் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடிமை மனநிலையின் எச்சங்களை ஒழித்து நமது பாரம்பரியத்தில் பெருமை கொள்வதே இதன் நோக்கம் என்று குடியரசுத் தலைவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.