சாதாரண ஆசிரியர் டூ மர்ம கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் இருண்ட உலகம் மற்றும் அதிர்ச்சியூட்டும் பின்னணி

புரூக்ளினில் கணித ஆசிரியராகப் பணியாற்றிய ஜெஃப்ரி எப்ஸ்டீன், முறையான பட்டப்படிப்பு இல்லாமலேயே பெரும் கோடீஸ்வரராக உயர்ந்தது ஒரு மர்மமாகவே உள்ளது. பில் கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ போன்ற உலகப் புகழ்பெற்ற நபர்களுடன் இவருக்கு இருந்த நெருக்கமான தொடர்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால், இந்த ஆடம்பர வாழ்க்கைக்குப் பின்னால் சிறுமிகள் கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் போன்ற கொடூரமான குற்றங்கள் மறைந்திருந்தன.
2005-ல் இவர் மீது முதல் புகார் எழுந்தபோதிலும், அதிகார பலத்தால் தப்பித்து வந்தார். 2019-ல் கைது செய்யப்பட்ட எப்ஸ்டீன் சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். தற்போது வெளியாகியுள்ள ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ உலகையே உலுக்கியுள்ளன. அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க எப்ஸ்டீன் எவ்வாறு ஒரு திட்டமிட்ட குற்றப் பின்னணியை உருவாக்கினார் என்பதை இந்த ஆவணங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.