டெல்லி ராணுவ மற்றும் விமானப்படை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு
February 23, 2026

டெல்லியில் உள்ள தௌலா குவான் ராணுவப் பள்ளி மற்றும் லோதி சாலை விமானப்படை பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் போலீஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் பள்ளிகளுக்கு விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதுவரை சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிரட்டல் விடுத்த மின்னஞ்சலின் பின்னணி குறித்து போலீஸார் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.