55 டாட் பால்கள் தந்த அவமானம் இந்திய அணியை கடுமையாக விமர்சித்த மைக்கேல் வாகன்

55 டாட் பால்கள் தந்த அவமானம் இந்திய அணியை கடுமையாக விமர்சித்த மைக்கேல் வாகன்

2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய இந்திய அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதுடன், இன்னிங்ஸில் 55 பந்துகளை ரன் ஏதுமின்றி வீணடித்து அதிர்ச்சி அளித்தது. இந்திய வீரர்களின் இந்த மந்தமான பேட்டிங் அணுகுமுறையை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக சாடியுள்ளார்.

இந்திய வீரர்கள் ஒற்றை ரன்களை எடுக்க மறந்துவிட்டு பவுண்டரிகளை மட்டுமே குறிவைத்ததே இந்த சரிவுக்கு காரணம் என்று வாகன் விமர்சித்தார். மேலும் அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்த முடிவையும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தோல்வி இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றும், மற்ற அணிகளுக்கு இது இந்தியாவுக்கு எதிரான நம்பிக்கையை தரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *