மன்னார் வளைகுடாவில் இலங்கை கடற்படை அதிரடி 12 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

மன்னார் வளைகுடாவில் இலங்கை கடற்படை அதிரடி 12 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் தெற்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குச் சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்த கடற்படையினர், மீனவர்களை விசாரணைக்காக தலைமன்னார் கடற்படை தளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையின் இந்தத் தொடர் கைது நடவடிக்கை மீனவ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கண்டித்து ஏற்கனவே ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மீண்டும் ஒரு கைது சம்பவம் அரங்கேறியுள்ளது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *