வீட்டில் பணமழையை பொழியச் செய்யும் அற்புத கிராசுலா செடி
February 22, 2026

செய்தி பிரிவு : இன்றைய விலைவாசி உயர்வு காலத்தில் பண நெருக்கடியால் அவதிப்படும் சாமானியர்களுக்கு ஒரு தீர்வாக அமைகிறது கிராசுலா செடி. வாஸ்து மற்றும் ஃபெங் சுய் சாஸ்திரப்படி, இந்தச் செடியை வீட்டில் வளர்ப்பது எதிர்மறை ஆற்றலை நீக்கி செல்வத்தை ஈர்க்கும். இது உங்கள் வருமானத்தை உயர்த்தி நிதி சிக்கல்களை தீர்க்க வல்லது என நம்பப்படுகிறது.
மென்மையான மற்றும் உறுதியான இலைகளைக் கொண்ட இந்தச் செடிக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. வாரத்திற்கு இரண்டு முறை நீர் ஊற்றினால் போதும், நிழலிலும் வளரக்கூடியது. வீட்டின் பிரதான வாசலில் வலதுபுறம் இந்தச் செடியை வைப்பதன் மூலம் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகி பணத்தட்டுப்பாடு நீங்கும் என்பது நிதர்சனம்.