125 ஆண்டு கால பிரிட்டிஷ் அடையாளங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரதமர் மோடி இன்று சேவா தீர்த்த் மற்றும் கர்தவ்ய பவன்களை திறந்து வைக்கிறார்

125 ஆண்டு கால பிரிட்டிஷ் அடையாளங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரதமர் மோடி இன்று சேவா தீர்த்த் மற்றும் கர்தவ்ய பவன்களை திறந்து வைக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான ‘சேவா தீர்த்த்’ மற்றும் ‘கர்தவ்ய பவன்-1, 2’ ஆகியவற்றை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்விற்கு முன்னதாக சவுத் பிளாக்கில் உள்ள தற்போதைய செயலகத்தில் நடைபெறும் கடைசி மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்குவார். இதன் மூலம் சுமார் 125 ஆண்டுகால பிரிட்டிஷ் கால ஆட்சி முறையிலிருந்து விடுபட்டு, சுதந்திர இந்தியாவின் நவீன நிர்வாக சகாப்தம் இன்று முதல் முறையாக தொடங்குகிறது.

சேவா தீர்த்த் கட்டிடத்தில் பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகியவை செயல்படும். பழைய கட்டிடங்கள் ‘யுகே யுகீன் பாரத் தேசிய அருங்காட்சியகமாக’ மாற்றப்பட உள்ளன. பாதுகாப்பு மற்றும் நிதி போன்ற முக்கிய அமைச்சகங்கள் கர்தவ்ய பவனில் இயங்கும். இந்த புதிய வளாகங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் 4-ஸ்டார் GRIHA தரத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *