89 வயதில் ஹோம் டூர் வீடியோ மூலம் இணையத்தை கலக்கும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி

89 வயதில் ஹோம் டூர் வீடியோ மூலம் இணையத்தை கலக்கும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி

வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில் ஹரியானாவைச் சேர்ந்த 89 வயதான ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கர்தார் சிங் தோமர் இணையத்தில் வைரலாகி வருகிறார். பெங்களூருவில் உள்ள தனது சிறிய 1-பிஹெச்கே பிளாட் குறித்த சுவாரஸ்யமான ‘ஹோம் டூர்’ வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இமாச்சல தொப்பி அணிந்து உற்சாகமாக பேசும் அவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தனது வீட்டை ஒரு ‘சொர்க்கம்’ என்று வர்ணிக்கும் அவர் முதியோர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை அதில் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக குளியலறையில் உள்ள வழுக்காத தரைத்தளம் மற்றும் பால்கனியில் இருந்து வீசும் தூய்மையான காற்று ஆகியவை அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த தன்னம்பிக்கையான பேச்சும் எளிமையான வாழ்க்கை முறையும் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்து பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *