வைரல் வீடியோ மோகத்தால் விபரீதம் விஷ நண்டை சாப்பிட்ட பெண் பரிதாப மரணம்

வைரல் வீடியோ மோகத்தால் விபரீதம் விஷ நண்டை சாப்பிட்ட பெண் பரிதாப மரணம்

சமூக ஊடகங்களில் வைரல் வீடியோ வெளியிடும் ஆசையில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 51 வயது பெண் எம்மா அமித் விஷ நண்டை சாப்பிட்டு உயிரிழந்தார். தனது வீட்டின் அருகிலுள்ள சதுப்புநிலக் காட்டில் இருந்து ‘டெவில் கிராப்’ எனப்படும் நண்டைப் பிடித்து தேங்காய்ப் பாலில் சமைத்து உண்ணும் வீடியோவைப் படமாக்கியபோது இந்தத் துயரம் நிகழ்ந்தது.

உணவை உட்கொண்ட 24 மணி நேரத்திற்குள் எம்மாவின் உடல்நிலை மோசமடைந்ததுடன் அவரது உதடுகள் நீல நிறமாக மாறின. மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பிப்ரவரி 6 அன்று உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து இத்தகைய விஷத்தன்மை கொண்ட கடல் உயிரினங்களை உண்ண வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *