ஈரானை அச்சுறுத்த மேற்கு ஆசியாவிற்கு இரண்டாவது போர்க்கப்பலை அனுப்பும் டிரம்ப்

ஈரானை அச்சுறுத்த மேற்கு ஆசியாவிற்கு இரண்டாவது போர்க்கப்பலை அனுப்பும் டிரம்ப்

ஓமனில் அமெரிக்காவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையிலும் பாரசீக வளைகுடாவில் பதற்றம் தணியவில்லை. அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி ‘ஜெரால்ட் ஆர் ஃபோர்டு’ என்ற போர்க்கப்பல் தற்போது மேற்கு ஆசியாவை நோக்கி நகர்கிறது. கடந்த வாரம்தான் அமெரிக்கா இப்பகுதியில் ‘ஆபிரகாம் லிங்கன்’ என்ற மற்றொரு போர்க்கப்பலை நிலைநிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் நடத்திய சமீபத்திய கடற்படைப் பயிற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே டிரம்ப் இந்த உத்தியைக் கையாளுவதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அணுசக்தித் திட்டம் மற்றும் யுரேனியம் செறிவூட்டல் விவகாரங்களிலும் ஈரான் தனது பிடிவாதமான நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *