அமெரிக்காவில் பன்னூனை கொல்ல சதி செய்த இந்தியர் நிகில் குப்தா குற்றவாளி என அறிவிப்பு
February 14, 2026

நியூயார்க்கில் காலிஸ்தான் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல சதி செய்ததாக 54 வயதான இந்திய குடிமகன் நிகில் குப்தா அமெரிக்க நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். கூலிப்படைக்கு முன்பணம் கொடுத்தது உள்ளிட்ட மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு வரும் மே 29 அன்று நீதிபதி விக்டர் மரோ இறுதி தீர்ப்பை வழங்குவார்.
விசாரணையில் நிகில் ஒரு லட்சம் டாலர் ஒப்பந்தத்தில் இந்த கொலையை திட்டமிட்டது தெரியவந்தது. இருப்பினும் அவர் தொடர்பு கொண்ட நபர் அமெரிக்க ஏஜென்சியின் ரகசிய உளவாளி ஆவார். இந்த குற்றத்திற்காக அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.