சிறையில் கண்பார்வையை இழக்கும் அபாயத்தில் இம்ரான் கான் அதிர்ச்சி தகவல்
February 14, 2026

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து உச்சநீதிமன்றத்தில் கவலைக்குரிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது. இந்த தகவல் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக மருத்துவக் குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் நீண்ட காலத்திற்குப் பிறகு தனது குழந்தைகளை சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவர் முழுமையாக பார்வையை இழக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.