மாநிலங்களவையில் உரை நீக்கம் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசு மீது கடும் தாக்குதல்

மாநிலங்களவையில் உரை நீக்கம் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசு மீது கடும் தாக்குதல்

மாநிலங்களவையில் தனது உரையின் முக்கிய பகுதிகள் நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் கொள்கைகளை விமர்சிப்பது தனது உரிமை என்று கூறிய அவர், நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறு செய்யாவிட்டால் அந்த உரையை பொதுவெளியில் வெளியிடுவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அவைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் சமூக நீதி குறித்த தனது கருத்துக்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாக கார்கே குற்றம் சாட்டினார். இதன் மூலம் பிரதமரை பாதுகாக்க அவைத்தலைவர் முயற்சிப்பதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *