நவம்பரில் ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்புவாரா ஆட்சி மாற்றத்திற்குப் பிந்தைய அரசியல் சூழல் இதோ

வங்கதேச பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் ஷேக் ஹசீனா வரும் நவம்பர் மாதத்திற்குள் நாடு திரும்புவார் என அவரது கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஜூலை புரட்சி தொடர்பான வழக்குகளில் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை அவரது வருகைக்கு பெரும் சட்டச் சிக்கலாக மாறியுள்ளது. இந்தியாவிடமிருந்து ஹசீனாவை நாடு கடத்த தாரிக் ரஹ்மான் அரசு முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவாமி லீக் கட்சி தீவிரவாத போக்கு கொண்ட ஜமாத்-இ-இஸ்லாமியை விட பிஎன்பி ஆட்சியைப் பிடிப்பது அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உதவும் எனக் கருதுகிறது. இத்தேர்தலில் பிஎன்பி 213 இடங்களையும் ஜமாத் 76 இடங்களையும் வென்றுள்ளன. புதிய அரசு பதவியேற்ற பிறகு தண்டிக்கப்பட்ட முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு மற்றும் அவரது அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகள் வங்கதேச மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.