தேர்தல் பணியில் மெத்தனம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
February 13, 2026

தேர்தல் ஆணையம் இன்று நடத்திய காணொலி காட்சி கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தவறு செய்தால் அதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என பார்வையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தகுதியற்ற ஆவணங்களைச் சரிபார்க்கும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக தகவல் தொழில்நுட்பக் குழுவின் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், தவறு செய்யும் அதிகாரிகள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.