ஹோட்டல் பில் கட்ட காசில்லாமல் தெருவில் நின்ற பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள்
February 13, 2026

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எஃப்.ஐ.எச் புரோ லீக் தொடரில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் ஹாக்கி அணி கடும் அவமானத்தை சந்தித்தது. கான்பெராவிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தும், பாகிஸ்தான் ஹாக்கி வாரியம் பணத்தை செலுத்தாததால் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பல மணி நேரம் வீரர்கள் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
பாகிஸ்தான் ஹாக்கி வாரியத்தின் நிதி நெருக்கடி காரணமாக ஏற்கனவே அர்ஜென்டினாவிலும் இதுபோன்ற சிக்கல்கள் அரங்கேறியுள்ளன. இந்த மன உளைச்சலுக்கு மத்தியில் விளையாடிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. முன்னதாக போதிய அறைகள் கிடைக்காததால் வீரர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.