பங்களாதேஷில் பிஎன்பி வெற்றி தஸ்லிமா நஸ்ரின் முன்வைத்துள்ள அதிரடி 15 கோரிக்கைகள்
February 13, 2026

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் 211 இடங்களை வென்று பிஎன்பி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் 15 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். பிஎன்பி வெற்றியால் தான் மகிழ்ச்சியடையவில்லை என்றும், ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அமைப்புகள் ஆட்சிக்கு வராதது மட்டுமே நிம்மதி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது கோரிக்கைகளில் இந்து துறவி சின்மய் கிருஷ்ண தாஸை விடுதலை செய்ய வேண்டும் மற்றும் மதச்சார்பற்ற அரசியலமைப்பை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் மதச்சார்பற்ற கல்வி முறை, சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் அரசியல் கட்சிகள் மீதான தடையை நீக்க கோரியுள்ள அவர், கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.