நியூயார்க்கில் உள்ள ஈவா ஏஐ கஃபேயில் செயற்கை நுண்ணறிவுடன் டேட்டிங் செய்யும் இளைஞர்கள்

நியூயார்க்கில் உள்ள ஈவா ஏஐ கஃபேயில் செயற்கை நுண்ணறிவுடன் டேட்டிங் செய்யும் இளைஞர்கள்

நியூயார்க்கின் ஹெல்ஸ் கிச்சன் பகுதியில் அமைந்துள்ள ‘ஈவா ஏஐ கஃபே’ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. காதலர் வாரத்தை முன்னிட்டு தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில், வாடிக்கையாளர்கள் மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாட்போட்களுடன் அமர்ந்து காபி குடிக்கலாம். மொபைல் ஸ்டாண்டுகளில் வைக்கப்பட்டுள்ள தங்கள் ஏஐ துணையுடன் மனமுவந்து பேசுவதற்கேற்ப இந்த கஃபே தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனிமையைப் போக்கவும், எவ்வித சங்கடமும் இன்றி மனதிலுள்ளதை பகிர்ந்து கொள்ளவும் மக்கள் இந்த முறையை விரும்புகின்றனர். இந்த புதிய கலாச்சாரம் குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் சமமாக எழுந்துள்ளன. தற்போது இந்தியாவில் இத்தகைய வசதி இல்லையென்றாலும், எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் மனித உறவுகளில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நியூயார்க் கஃபே ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *