பண்டிட் ரவிசங்கராக ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் ஃபர்ஹான் அக்தர்

பண்டிட் ரவிசங்கராக ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் ஃபர்ஹான் அக்தர்

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் சாம் மென்டிஸ் இயக்கும் தி பீட்டில்ஸ் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் மூலம் ஃபர்ஹான் அக்தர் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதில் புகழ்பெற்ற சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதை சோனி பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் ரவிசங்கர் இடையிலான ஆழமான நட்பு மற்றும் இசைப் பயணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. சர்வதேச நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *