வங்கி லாக்கர் சாவி தொலைந்துவிட்டதா பதற்றப்படாமல் உடனே செய்ய வேண்டியவை இதோ

வங்கி லாக்கர் சாவி தொலைந்துவிட்டதா பதற்றப்படாமல் உடனே செய்ய வேண்டியவை இதோ

வங்கி லாக்கர் சாவி தொலைந்தால், வாடிக்கையாளர் உடனடியாக வங்கிக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி விதிகளின்படி, லாக்கரின் நகல் சாவி உருவாக்க முடியாது என்பதால், வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் முன்னிலையில் லாக்கர் உடைக்கப்படும். இந்த செயல்முறை முழுவதும் வாடிக்கையாளர் முன்னிலையில் மட்டுமே நடைபெறும் மற்றும் இதற்கு அடையாளச் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

லாக்கரை உடைப்பதற்கும் புதிய சாவி அல்லது லாக்கர் அமைப்பதற்கும் ஆகும் அனைத்து செலவுகளையும் வாடிக்கையாளரே ஏற்க வேண்டும். அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகும் வங்கி லாக்கரைத் திறக்கத் தாமதம் செய்தால், வாடிக்கையாளர்கள் வங்கி குறைதீர்ப்பாளர் அல்லது நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். எனவே, லாக்கர் சாவியை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *