இன்ஸ்டாகிராமில் ஒரு மாதத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க எத்தனை வியூஸ் தேவைப்படும் தெரியுமா
February 13, 2026

இன்ஸ்டாகிராம் இப்போது வெறும் பொழுதுபோக்கு தளமாக மட்டுமல்லாமல் கைநிறைய சம்பாதிக்கும் இடமாகவும் மாறியுள்ளது. மாதம் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்ட பிராண்ட் ஒப்பந்தங்கள் மற்றும் அஃபிலியேட் மார்க்கெட்டிங் முறைகளைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு ரீல் வீடியோவிற்கு சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வியூஸ் கிடைத்தால் பிராண்டுகள் மூலம் நல்ல வருமானம் பெறலாம்.
விளம்பரங்கள் மூலம் நேரடியாகச் சம்பாதிக்க மாதத்திற்குச் சுமார் 80 லட்சம் முதல் 1 கோடி வியூஸ் தேவைப்படும். உங்கள் கணக்கை புரொபஷனல் மோடிற்கு மாற்றுவதுடன் சொந்தமான வீடியோக்களைப் பதிவிடுவது அவசியம். மற்ற தளங்களின் வாட்டர்மார்க் இல்லாத வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் இசை நூலகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வருமான இலக்கை எளிதாக அடைய முடியும்.