ராகுல் காந்தியின் எம் பி பதவி பறிபோகும் அபாயம்
February 13, 2026

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார். ராகுல் காந்தியின் சமீபத்திய கருத்துக்கள் நாட்டின் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் எதிராக இருப்பதாகவும் இதற்கு பின்னால் வெளிநாட்டு சக்திகளின் சதி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. நிஷிகாந்த் துபே மத்திய அமைச்சர் பதவிக்காகவே இத்தகைய ஆதாரமற்ற புகார்களைக் கூறி வருவதாக காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி பதிலடி கொடுத்துள்ளார். இதனால் நாடாளுமன்றத்தில் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.