ஏர் இந்தியா விமான விபத்து குறித்து பரவிய திடுக்கிடும் தகவலை திட்டவட்டமாக மறுத்த ஏஏஐபி
February 13, 2026

ஏர் இந்தியா ஏஐ-171 விபத்து தொடர்பாக இத்தாலிய செய்தித்தாள் வெளியிட்ட பைலட்டின் சதி என்ற செய்தியை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு முற்றிலும் மறுத்துள்ளது. அகமதாபாத் விமான விபத்து குறித்த விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் மத்திய நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
விசாரணை முடிந்ததும் சர்வதேச விதிகளின்படி இறுதி அறிக்கை மற்றும் பாதுகாப்பு பரிந்துரைகள் வெளியிடப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. எரிபொருள் சுவிட்ச் அணைக்கப்பட்டதாகக் கூறப்படும் வதந்திகளை இப்போதைக்கு ஏற்க முடியாது என்று புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.