பாகிஸ்தான் உடனான மோதலுக்கு முன் அபிஷேக் சர்மா விளையாடுவாரா அவரது உடல்நிலை என்ன

பாகிஸ்தான் உடனான மோதலுக்கு முன் அபிஷேக் சர்மா விளையாடுவாரா அவரது உடல்நிலை என்ன

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அபிஷேக் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். வயிற்று உபாதை காரணமாக உடல் எடை குறைந்து சோர்வாக காணப்பட்டாலும் அவர் தற்போது மெதுவாக தேறி வருகிறார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் உடல்நலக்குறைவுடன் விளையாடிய அவர் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அபிஷேக் விளையாடுவது குறித்து இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை. அவர் முழு தகுதியை எட்ட இன்னும் சில போட்டிகள் தேவைப்படலாம் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். தற்போது அவர் அணியுடன் ஓய்வறையில் இருந்து வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *