ஆஸிக்கு சவால் கொடுக்குமா ஜிம்பாப்வே புதிய கேப்டனுடன் களம் காண்கிறது
February 13, 2026

டி20 உலகக்கோப்பையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. காயம் காரணமாக மிட்செல் மார்ஷ் விலகியதால் டிராவிஸ் ஹெட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா வலுவான அணியாக இருந்தாலும், சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணியை ‘டார்க் ஹார்ஸ்’ என கருதி எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது.
மற்றொரு போட்டிகளில் கனடா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மதியம் 3 மணிக்கு மோதுகின்றன. இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா மோதுகின்றன. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற நெதர்லாந்து அணிக்கு இந்த வெற்றி மிகவும் அவசியமாகும்.