கொலை வழக்கில் சிக்கிய பாஜக எம்எல்ஏ விமான நிலையத்தில் அதிரடி கைது

கொலை வழக்கில் சிக்கிய பாஜக எம்எல்ஏ விமான நிலையத்தில் அதிரடி கைது

கர்நாடக பாஜக எம்எல்ஏ பைரதி பசவராஜ், தொழிலதிபர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு தொழிலதிபர் பிக்லு சிவா கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் பசவராஜ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிஐடி மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *