ராகுல் காந்திக்குத் தடை? எம்.பி பதவியைப் பறிக்க பாஜாக அதிரடித் திட்டம்!

ராகுல் காந்திக்குத் தடை? எம்.பி பதவியைப் பறிக்க பாஜாக அதிரடித் திட்டம்!

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளன. ராகுல் காந்தியின் பேச்சிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, அவர் இனி வரும் காலங்களில் தேர்தல்களில் போட்டியிட முடியாதபடி தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அவையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகவும், பொய்யான தகவல்களைப் பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மோடி அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் ஒரு “முழுமையான சரணாகதி” என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, ராகுல் காந்திக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *