பங்களாதேஷ் தேர்தல்: இது ஒரு மிகப்பெரிய நாடகம் – ஷேக் ஹசீனா ஆவேசம்!
February 12, 2026

பங்களாதேஷில் நடைபெற்ற ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளையும் ஒரு ‘கேலிக்கூத்து’ என்று அவாமி லீக் கட்சித் தலைவி ஷேக் ஹசீனா கடுமையாகத் தாக்கியுள்ளார். தேர்தலில் முறைகேடுகள், வன்முறை மற்றும் வாக்குச்சாவடி ஆக்கிரமிப்பு போன்ற புகார்களை முன்வைத்த அவர், இந்தத் தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமரான ஹசீனா இது குறித்துக் கூறுகையில், “சட்டவிரோதமாகவும், அரசியலமைப்பிற்கு எதிராகவும் அதிகாரத்தைக் கைப்பற்றிய யூனுஸின் இந்த ஏற்பாடு, மக்களின் வாக்குரிமையையும் ஜனநாயக விழுமியங்களையும் மண்ணோடு மண்ணாக்கிவிட்டது. இந்த போலித் தேர்தலை வெறுப்புடன் நிராகரித்ததற்காக அந்நாட்டு மக்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.