ரூ. 3 லட்சம் கோடி ரஃபேல் ஒப்பந்தம்: இந்திய எல்லைகளுக்கு இனி இரும்புக்கவசம்!

ரூ. 3 லட்சம் கோடி ரஃபேல் ஒப்பந்தம்: இந்திய எல்லைகளுக்கு இனி இரும்புக்கவசம்!

இந்திய வான்பரப்பின் பாதுகாப்பு இனி ஒருபோதும் சமரசம் செய்யப்படாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் பச்சைக்கொடி காட்டியுள்ளது. சுமார் 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மெகா ஒப்பந்தம், இந்திய விமானப்படையின் பலத்தை பலமடங்கு அதிகரிக்கவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்கள்:

  • எல்லை பாதுகாப்பு: வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை முறியடிக்க இந்த அதிநவீன போர் விமானங்கள் இந்தியாவின் பாதுகாப்பு கவசமாகச் செயல்படும்.
  • இந்தியாவில் தயாரிப்போம்: ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் நேரடியாக பிரான்ஸிலிருந்து வரும் நிலையில், மீதமுள்ள 96 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளன.
  • வேலைவாய்ப்பு: உள்நாட்டிலேயே விமானங்கள் தயாரிக்கப்படுவதால், பாதுகாப்புத் உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, தேசத்தின் ஸ்திரத்தன்மையையும் சாதாரண குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *