மொபைல் சிக்னல் கட்.. 11 லட்சம் அவுட்! நீங்களும் இந்த தப்பை செய்றீங்களா?
February 12, 2026

மொபைலில் சிக்னல் இல்லை என்றால் அது தற்காலிக நெட்வொர்க் கோளாறு என்று மட்டும் நினைக்காதீர்கள். மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘சிம் கார்டு அப்டேட்’ என்ற பெயரில் மோசடிக்காரர்கள் விரித்த வலையில் விழுந்து, சில நிமிடங்களில் 11 லட்ச ரூபாயை இழந்துள்ளார்.
மோசடி நடப்பது எப்படி?
சைபர் குற்றவாளிகள் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்களைப் போலப் பேசி, உங்கள் இ-சிம் (e-SIM) விவரங்களை அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருடுகின்றனர். உங்கள் மொபைலில் சிக்னல் துண்டிக்கப்பட்டவுடன், உங்கள் வங்கி கணக்கை அவர்கள் காலி செய்து விடுகின்றனர்.
தற்காத்துக்கொள்வது எப்படி?
- தெரியாத எண்களில் இருந்து வரும் சிம் அப்டேட் தொடர்பான அழைப்புகளை நம்ப வேண்டாம்.
- எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் போனில் உங்கள் தனிப்பட்ட விவரங்களையோ அல்லது OTP-யோ கேட்காது.
- சந்தேகம் இருந்தால் உடனே அருகில் உள்ள சிம் கார்டு கேலரிக்கு நேரடியாகச் செல்லுங்கள்.
- மோசடி நடந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணை அழையுங்கள் அல்லது ‘சஞ்சார் சாதி’ (Sanchar Saathi) போர்ட்டலில் புகார் செய்யவும்.
உங்கள் பணத்தைப் பாதுகாக்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருங்கள்.