அபிஷேக் ஷர்மா நீக்கம்? நமீபியா போட்டியில் இந்தியாவுக்குப் பின்னடைவு!

அபிஷேக் ஷர்மா நீக்கம்? நமீபியா போட்டியில் இந்தியாவுக்குப் பின்னடைவு!

டி20 உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில், அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. கடுமையான வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு உடல் எடை கணிசமாகக் குறைந்துள்ளதால், அணி நிர்வாகம் பெரும் கவலையில் உள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் உடல்நலக்குறைவுடன் விளையாடிய அவர், தற்போது மிகவும் சோர்வாக காணப்படுகிறார். பாகிஸ்தான் போன்ற முக்கியமான போட்டிகளுக்கு முன்னதாக அபிஷேக் ஷர்மாவிற்கு ஓய்வு அளிக்க பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. விரைவில் குணமடைய அவர் தனது தனிப்பட்ட பயிற்சியாளரை டெல்லிக்கு வரவழைத்துள்ளார்.

பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக ரன் குவிக்கும் அபிஷேக் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. முழு தகுதியின்றி அவர் விளையாடினால் அது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இன்றைய போட்டியில் அவர் களமிறங்குவது கடினம் என்றே கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *