குழந்தையை கேடயமாக வைத்து நூதன திருட்டு! ஆட்டோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

அலிப்பூர்துவார்: ஆட்டோவில் பயணம் செய்யும்போது உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் பெண் அல்லது குழந்தையின் மீது ஒரு கண் இருக்கட்டும். கைக்குழந்தையை கேடயமாகப் பயன்படுத்தி சக பயணிகளின் பணத்தை திருடும் அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவாரைச் சேர்ந்த மகாமாயா தாஸ் என்பவர் ஆட்டோவில் பயணம் செய்தபோது, அவருடன் இரு பெண்கள் பயணித்துள்ளனர். அவர்கள் தங்கள் மடியில் இருந்த குழந்தையை மறைப்பாக வைத்துக்கொண்டு, மகாமாயாவின் பையிலிருந்து ரூ. 7,000-த்தை திருடியுள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த அந்த இரு பெண்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கூட்ட நெரிசல் மிகுந்த பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்கள், தங்களின் உடைமைகள் மீது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த திருட்டு கும்பல் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.