வானில் தோன்றும் அற்புதம்: 2026-ன் முதல் சூரிய கிரகணம்! இந்தியாவில் பார்க்க முடியுமா?

2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே வானில் ஒரு அபூர்வ நிகழ்வு அரங்கேற உள்ளது. வரும் பிப்ரவரி 17-ம் தேதி, மாசி மாத அமாவாசை அன்று ஆண்டின் முதல் கங்கண சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது. நிலவு சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் விளிம்புகள் மட்டும் நெருப்பு வளையம் போலத் தெரிவதை ‘ரிங் ஆஃப் ஃபயர்’ (Ring of Fire) என்று அழைக்கிறோம்.
கும்ப ராசியில் நிகழவுள்ள இந்த கிரகணம் சுமார் 4 மணி நேரம் 32 நிமிடங்கள் நீடிக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்கெல்லாம் பார்க்கலாம்?
இந்த அரிய நிகழ்வை தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகா ஆகிய கண்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தெளிவாகக் காண முடியும்.
இந்தியாவில் தெரியுமா?
இந்திய விண்வெளி ஆர்வலர்களுக்கு ஒரு சிறிய ஏமாற்றமான செய்தி என்னவென்றால், இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் காணப்படாது. இந்தியாவில் இது தெரியாது என்பதால், கிரகண காலத்திற்கான மத ரீதியான கட்டுப்பாடுகளோ அல்லது ‘சூதக் கால’ விதிகளோ நம் நாட்டிற்குப் பொருந்தாது.