ஏப்ரல் முதல் பான் கார்டு விதிகளில் அதிரடி மாற்றம்: ரூ. 5 லட்சம் கார் முதல் பணப் பரிவர்த்தனை வரை புதிய கட்டுப்பாடு!

ஏப்ரல் முதல் பான் கார்டு விதிகளில் அதிரடி மாற்றம்: ரூ. 5 லட்சம் கார் முதல் பணப் பரிவர்த்தனை வரை புதிய கட்டுப்பாடு!

ஏப்ரல் மாதம் முதல் நிதி பரிவர்த்தனைகளுக்கான பான் (PAN) கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. வருமான வரிச் சட்டத்தின் புதிய வரைவு அறிக்கையின்படி, ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்க டெபாசிட் அல்லது வித்ட்ராவல் செய்வதற்கு பான் கார்டு இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கார் வாங்குபவர்கள் மற்றும் ஹோட்டல் அல்லது ஈவென்ட் மேனேஜ்மென்ட் சேவைகளுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்பவர்கள் இனி பான் கார்டு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சொத்து வாங்குவதிலும் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவரை 10 லட்சம் ரூபாயாக இருந்த சொத்து பரிவர்த்தனை வரம்பு, இனி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே பான் கார்டு கட்டாயம் என மாற்றப்பட உள்ளது. இது தவிர, ஆயுள் காப்பீட்டு பிரீமியம் மற்றும் கிரிப்டோ பரிவர்த்தனைகளுக்கான விதிகளும் கடுமையாக்கப்படுகின்றன. பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பிறகு, மார்ச் மாத தொடக்கத்தில் இந்தச் சட்டத்தின் இறுதி வடிவம் வெளியிடப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *