மொபைல் பேட்டரியை வாயில் வைத்தால் வெடிக்குமா? அலட்சியம் வேண்டாம்.. உயிரே போகலாம்!

சாதாரண மொபைல் பேட்டரி ஒருவரின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா? ஆம், ஒரு சிறிய கவனக்குறைவு மிகப்பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. சமீபத்தில் கடை ஒன்றிற்குச் சென்ற சிறுவன், ஆர்வக்கோளாறால் அங்கிருந்த லித்தியம் பேட்டரியை வாயில் வைத்து கடித்த அடுத்த நொடியே அது பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பேட்டரிக்குள் இருக்கும் எளிதில் தீப்பற்றக்கூடிய இரசாயனங்கள் மற்றும் லித்தியம், காற்றுடன் தொடர்பு கொள்ளும்போது தீப்பிழம்பாக மாறும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விபத்தில் அந்த சிறுவனின் முகம் மற்றும் உடலின் ஒரு பகுதி பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானது. பேட்டரியைக் கடிப்பது அல்லது தேவையில்லாமல் கையாளுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. பாதுகாப்பாக இருக்க இப்போதே விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.