29 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய வாந்தி! வியப்பில் ஆழ்ந்த விஞ்ஞானிகள்
February 11, 2026

ஜெர்மனியின் புரோமேக்கர் பகுதியில் சுமார் 29 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால மாமிச உண்ணி ஒன்றின் வாந்தி படிமத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த அரிய கண்டுபிடிப்பு உலகின் பழமையான சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உணவுச் சங்கிலி குறித்த புதிய தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
ஆரம்பத்தில் இது கழிவு என கருதப்பட்ட நிலையில், இதில் பாஸ்பரஸ் இல்லாததைக் கண்டறிந்த ஆய்வாளர்கள், இது வாந்திதான் என்பதை உறுதிப்படுத்தினர். 3D சிடி ஸ்கேன் பரிசோதனையில், அந்த வாந்தியில் ஊர்வன மற்றும் புல் உண்ணும் விலங்குகளின் எலும்புத் துண்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. பழங்கால காலநிலை மாற்றம் மற்றும் உயிரினங்களின் வாழ்க்கை முறை எவ்வாறு இன்றைய பூமியை வடிவமைத்தது என்பதைப் புரிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.