அமிதாப்பை வம்புக்கு இழுத்த ராக்கி சாவந்த்: ஜெயா பச்சனுக்கு ‘பாட்ராக்ஸ்’ அட்வைஸ்!

பாலிவுட்டின் ‘சர்ச்சை நாயகி’ ராக்கி சாவந்த், தற்போது சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் புயலை கிளப்பியுள்ளன.
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், அமிதாப் பச்சனைப் போலவே மிமிக்ரி செய்து பேசிய ராக்கி, “அமித் ஜி, இப்போது இரண்டு மனைவிகள் வைத்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டது, ரேகாவையும் ஏற்றுக்கொள்வதுதானே?” என கிண்டலாகக் கேட்டுள்ளார்.
மேலும், ஜெயா பச்சனின் தோற்றம் குறித்து விமர்சித்த ராக்கி, “அவரிடம் எவ்வளவு பணம் இருந்தும் அவர் சரியான உடைகளை அணிவதில்லை. ரேகா, அமிதாப் அருகில் ராணி போலத் தெரிகிறார், ஆனால் ஜெயா பச்சன் வேலைக்காரி போலத் தெரிகிறார்” என்று சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இத்துடன் நிறுத்தாமல், ஜெயா பச்சன் தனது கூந்தலுக்கு டை அடிக்க வேண்டும் என்றும், முகத்திற்கு ‘பாட்ராக்ஸ்’ (Botox) சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும் ராக்கி எல்லை மீறி பேசியுள்ளார். மூத்த கலைஞர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ராக்கி சாவந்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.