அஜித் பவார் மரணம்: விபத்தா அல்லது சதியா? ரோஹித் பவார் எழுப்பும் 5 அதிரடி கேள்விகள்!
February 11, 2026

மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் கடந்த ஜனவரி 28 அன்று விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கலாம் என அவரது மருமகனும், என்சிபி எம்.எல்.ஏ-வுமான ரோஹித் பவார் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் பவார், விமான இயக்கம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளில் உள்ள குளறுபடிகள் குறித்த ஆதாரங்களை வெளியிட்டார். அவர் எழுப்பியுள்ள முக்கிய கேள்விகள் இதோ:
- திடீர் மாற்றம் ஏன்?: அஜித் பவாரின் பயணத் திட்டம் கடைசி நேரத்தில் சாலை மார்க்கத்திலிருந்து தனியார் சார்ட்டர் விமானத்திற்கு மாற்றப்பட்டது ஏன்?
- பைலட் மாற்றம்: ஏற்கனவே முடிவான முக்கிய பைலட்களுக்குப் பதிலாக, கடைசி நிமிடத்தில் சுமித் கபூர் என்பவரை நியமித்தது ஏன்? அந்த பைலட்டின் தகுதி மற்றும் உடல்நிலை முறையாகப் பரிசோதிக்கப்பட்டதா?
- தொழில்நுட்பக் கோளாறு: விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதன் டிரான்ஸ்பாண்டர் (Transponder) ஏன் செயல்படவில்லை? விபத்துக்கு முன்னதாக பைலட்டிடமிருந்து எந்த ஒரு அபாய அழைப்பும் (Distress Call) வராதது ஏன்?
- விமானத்தின் தரம்: விபத்துக்குள்ளான விமானத்தின் வயது மற்றும் ‘விஎஸ்ஆர் ஏவியேஷன்’ நிறுவனத்தின் பாதுகாப்பு பதிவுகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளன.
பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வர, சர்வதேச விமான போக்குவரத்து நிபுணர்களைக் கொண்டு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று ரோஹித் பவார் வலியுறுத்தியுள்ளார்.