அபிஷேக் நீக்கம்? நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி எண்ட்ரி!

புது தில்லி: இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, கடுமையான வயிற்றுத் தொற்று காரணமாக தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் நாளை நடைபெறவுள்ள நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த உடல்நலக் குறைவு அவரது வாய்ப்புகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.
அபிஷேக் சர்மா இல்லாத பட்சத்தில், அனுபவ வீரர் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது. இது அணியின் பேட்டிங் வரிசையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், காயத்திலிருந்து மீண்டுள்ள ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் வருகை பந்துவீச்சை பலப்படுத்தினாலும், டாப் ஆர்டர் பேட்டிங்கில் நிலவும் இக்கட்டான சூழல் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.