வந்தே மாதரம்: மத்திய அரசின் அதிரடி உத்தரவு! சினிமா தியேட்டர்களுக்கு விலக்கு

வந்தே மாதரம்: மத்திய அரசின் அதிரடி உத்தரவு! சினிமா தியேட்டர்களுக்கு விலக்கு

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, இனி அனைத்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்தைத் தொடர்ந்து ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படுவதும், அதற்கு மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் பத்ம விருதுகள் வழங்கும் விழாக்களிலும் இந்த விதிமுறை அமல்படுத்தப்படும். எனினும், பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, சினிமா திரையரங்குகளில் இந்தப் பாடலை இசைப்பது கட்டாயமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமான மாற்றமாக, 1937-ஆம் ஆண்டு முதல் நீக்கப்பட்டிருந்த நான்கு சரணங்கள் மீண்டும் சேர்க்கப்பட்டு, இனி பாடல் முழுமையாக ஆறு சரணங்களுடன் பாடப்படும். மத்திய அரசின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக, சரணங்கள் சேர்ப்பு மற்றும் மதம் சார்ந்த பார்வைகள் குறித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மீண்டும் ஒரு கருத்து மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *